மோடியை வைத்தே ஓபிசி பிரிவினருக்கு சவக்குழி... ஆர்எஸ்எஸை லெஃப்ட், ரைட் வாங்கிய திருமா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

மோடியை வைத்தே ஓபிசி பிரிவினருக்கு சவக்குழி... ஆர்எஸ்எஸை லெஃப்ட், ரைட் வாங்கிய திருமா!

மோடியை வைத்தே ஓபிசி பிரிவினருக்கு சவக்குழி... ஆர்எஸ்எஸை லெஃப்ட், ரைட் வாங்கிய திருமா!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்று வருகிறது.

இந்த பிறந்தநாள் நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன்.MLA, ரவிகுமார் MP, முதன்மை செயலாளர்கள் உஞ்சை அரசன், ஏ.சி.பாவரசு, தலைமை நிலைய செயலாளர்கள் பாலசிங்கம், தகடூர் தமிழ்செல்வன், இளஞ்சேகுவேரா, துணை பொதுச் செயலாளர்கள் வன்னியரசு, ஆளூர் ஷாநவாஸ் MLA, எஸ்.எஸ்.பாலாஜி MLA, ஊடக மைய முதன்மை செயலாளர் பனையூர் பாபு MLA உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் திருமாவளவன் ஆற்றிய ஏற்புரை:

இந்த ஆண்டிற்கான பிறந்தநாள் கருப்பொருள் 'சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை' . இந்த கருப்பொருளை கொண்டு தமிழகம் முழுதும் ஒரு மாத காலத்திற்கு கருத்தியல் நிகழ்வுகள ை முன்னெடுக்க வேண்டும். தலித், பழங்குடி மக்கள் மட்டுமில்லை இடஒதுக்கீட்டை பெறும் அனைவரும் சமூகநீதி சமூகம் தான்.



யார் வேண்டுமானாலும் நமக்கு எந்த அடையாளத்தை வேண்டுமானாலும் கொடுக்கட்டும் ஆனால் விடுதலை சிறுத்தைகளின் ஒரே அடையாளம் ஜனநாயக சக்தி, சமத்துவ சக்தி. சமத்துவம் என்கிற கோட்பாட்டை நோக்கி பயணிக்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி.

மோடியும், அமித் ஷாவும் ஓபிசி பிறிவினர் தான். அவர்களை வைத்தே ஓபிசி பிரிவினருக்கு சவக்குழி தோண்டுகிறது ஆர்எஸ்எஸ். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை வெல்ல நாடு முழுதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து முழக்கங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது பிறந்தநாள் செய்தி என்று திருமாவளவன் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad