மீண்டும் முதல்வர் டெல்லி பயணம்: நாள் குறிச்சாச்சாம்! என்ன காரணம்?
தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முறையாக மே 7ஆம் தேதி பதவியேற்றார் மு.க.ஸ்டாலின். முதல்வராக பதவியேற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது வழக்கம். மே மாதம் கொரோனா பெருந்தொற்று
தமிழ்நாட்டில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்காமல் தள்ளிப்போடப்பட்டு வந்த நிலையில் முதல்வரின் டெல்லி பயணத்துக்குப் பின்னர் அந்த விவகாரம் சூடு பிடிக்கும் என கூறப்பட்டது. அதேபோல் ஸ்டாலினின் டெல்லி பயணத்துக்குப் பின்னரே மாஜி அமைச்சர்கள் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டன.
முதல் பயணத்தின் போது கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை அதிகளவில் ஒதுக்க வேண்டும் என
முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். இரண்டாவது முறை டெல்லி சென்ற போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து சட்டப்பேரவை நூற்றாண்டு விழா, கலைஞர் படத் திறப்பு விழா ஆகியவற்றிற்கு அழைத்தார். மூன்றாவது முறையாக டெல்லி செல்வதற்கும் முக்கிய காரணம் இருக்கிறது. டெல்லியில் திமுக அலுவலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. அதை திறந்துவைப்பதற்காக செப்டம்பர் மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில் அவர் டெல்லி செல்ல உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment