இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்? முக்கியத் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்? முக்கியத் தகவல்!

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்? முக்கியத் தகவல்!

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவில் இருந்து தப்பிக்கும் வகையிலான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசிகளாக இருக்கின்றன. தற்போதைய சூழலில் எந்தவொரு கொரோனா தடுப்பூசிக்கும் அதன் செயல்திறன் எவ்வளவு காலம் இருக்கும் என்று தெரியவில்லை. எனவே ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசிகளின் செயல்திறனை நீட்டிக்கும் வகையில் ‘பூஸ்டர் டோஸ்’ என்றொரு தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட தடுப்பூசியின் செயல்திறன் மேலும் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்தகைய பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி

உலகின் பெரும்பாலான நாடுகள் 2 டோஸ் தடுப்பூசிகளையே முழுமையாக போட்டு முடிக்காத நிலையில் பூஸ்டர் டோஸ் தேவையா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி எப்போது வரும் என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய நோய் எதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) கோவிட்-19 செயற்குழு தலைவர் டாக்டர்

என்.கே.அரோரா,

முதன்மையாக இலக்கு இதுதான்

இந்தியாவில் இளைய சமூகத்தினர் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போட்டு முடிப்பதையே முதன்மையான இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். நமது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிக்கிறோம். பூஸ்டர் தடுப்பூசிகள் குறித்து எந்தவொரு ஆலோசனையும் இதுவரை நடத்தப்படவில்லை. நமது முதன்மையான இலக்கை நிறைவு செய்த பின்னரே பூஸ்டர் தடுப்பூசிகள் விஷயம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad