வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சட்டமன்றத்தில் கெத்து காட்டிய ஸ்டாலின் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சட்டமன்றத்தில் கெத்து காட்டிய ஸ்டாலின்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சட்டமன்றத்தில் கெத்து காட்டிய ஸ்டாலின்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அதிமுக, பாஜக எதிர்பிற்கிடையே நிறைவேற்றப்பட்டது.
விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020, வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாடு 2020, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவை ரத்து செய்யப் படுவதற்கான அறிவிப்பை, அதற்கான முன் மொழிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "விவசாயிகள் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள் இந்த சட்டத்தால் லாபகரமான விலையை பெற முடியவில்லை. இந்த சட்டங்கள் விவசாயிகளை விட ஒப்பந்ததாரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.

அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டமானது விளைபொருள்கள் சேமிப்பு சட்டத்தால் செயற்கையாக தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் மூன்று சட்டங்களும் உழவர்களுக்கு பாதகமாகவே அமைந்துள்ளன.

எனவே விவசாயிகளை போற்றும் இந்த அரசு, விவசாயிகள் வாழ்வை போற்றும், பாதுகாக்கும் வகையில் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் இந்த தீர்மானத்தை மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இந்த தீர்மானத்தை திமுகவின் கூட்டணி கட்சிகள் வரவேற்றுப் பேசின. அதிமுக மற்றும் பாஜக எதிர்ப்பு தெரிவித்தன. பாஜக நயினார் நாகேந்திரன் பேசும் போது, “மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை பாரதிய ஜனதா கட்சி எதிர்த்து எதிர்க்கிறது. வெளிநடப்பு செய்கிறது” என்றார்.
அதிமுக கே.பி.அன்பழகன் பேசும் போது, “மத்திய அரசின் இந்த திட்டங்கள் மூலம் விவசாயிகள் வெளிச் சந்தைகளில் விற்று நல்ல லாபம் பெறுகின்றனர். இத்தகைய சூழலில் தமிழக அரசு அவசர தீர்மானம் கொண்டுவர கூடாது. அரசு அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து பேசி இந்த சட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய திருத்தங்களை, லாப நட்டங்களை அறிந்து மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்” என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad