மாணவர்கள், ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்; மாநில அரசு வெளியீடு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 16, 2021

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்; மாநில அரசு வெளியீடு!

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்; மாநில அரசு வெளியீடு!

கர்நாடக மாநிலத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வரும் 23ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறப்பை ஒட்டி உரிய முன்னேற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

அரசின் வழிகாட்டுதல்கள்

* பள்ளி, கல்லூரி வளாகத்திற்குள் உரிய சரீர இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
* மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
* ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் கட்டாயம் கொரோனா

தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

ஒப்புதல் கடிதம் அவசியம்

* பள்ளிக்கு வருவதற்காக தங்களது பெற்றோர்களிடம் இருந்து உரிய ஒப்புதல் கடிதங்களை மாணவர்கள் பெற்றுவர வேண்டும்.
* ஒரு வகுப்பில் அதிகபட்சம் 20 மாணவர்கள் மட்டுமே அமர்த்தப்பட வேண்டும். குழுவாக பிரித்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும்.
* யாராக இருந்தாலும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும். வெளியாட்கள் யாரும் பள்ளிக்கு வரக்கூடாது.

No comments:

Post a Comment

Post Top Ad