எதிர்பார்த்த அந்த நாள் வந்துருச்சு, சசிகலா வருவாரா? டெல்லி வைத்த செக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

எதிர்பார்த்த அந்த நாள் வந்துருச்சு, சசிகலா வருவாரா? டெல்லி வைத்த செக்!

எதிர்பார்த்த அந்த நாள் வந்துருச்சு, சசிகலா வருவாரா? டெல்லி வைத்த செக்!

சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். ஆனால் அடுத்த சில வாரங்களில் அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார். சசிகலாவின் அந்த திடீர் முடிவுக்கு பின்னால் பாஜகவின் டெல்லி தலைமை இருப்பதாக கூறப்பட்டது. தேர்தல் வரை கொஞ்சம் ஒதுங்கியிருக்க வேண்டும் என டீல் பேசப்பட்டதாக அப்போதே தகவல்கள் வந்தன.
சசிகலாவின் இந்த முடிவால் அமமுக தினகரனும் சிக்கலுக்குள்ளானார். இதனால் தேர்தலில் தினகரனுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. கோவில்பட்டி தொகுதியில் அவரும் தோல்வியைத் தழுவினார். தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவை கைப்பற்றப் போகிறேன் என சசிகலா ஆடியோ மூலம் வெளிப்படுத்திவந்தார். அதிமுக, அமமுக நிர்வாகிகளுடனான அவரது உரையாடல், தொலைக்காட்சிகளில் அவர் அளித்த நேர்காணல் ஆகியவற்றில் தனக்கும் அதிமுகவுக்குமான நெருக்கம், ஜெயலலிதா உடனான நடபு என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதிமுகவின் இரட்ட ை தலைமையில் ஓபிஎஸ் சசிகலா குறித்த விமர்சனத்தை தவிர்த்து வந்தார். எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக விமர்சித்து வந்தார். இருவரது இரு வேறு நிலைப்பாட்டை பயன்படுத்திக் கொண்டு சசிகலா ரீ எண்ட்ரி கொடுக்க சரியாக இருக்கும், ஓபிஎஸ் கண்டிப்பாக சசிகலா பக்கம் வந்துவிடுவார் என கூறப்பட்டது. சிறையிலிருந்து சென்னை வந்து ஆறு மாதங்களாகியும் சசிகலா இன்னும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தவில்லை. தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்ட சசிகலா ஜெ நினைவிடத்திலிருந்து அதை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
ஆகஸ்ட் 18ஆம் தேதி (நாளை) சசிகலாவின் 67ஆவது பிறந்தநாள் அன்றைய தினம் அவர் ஜெ நினைவிடத்துக்கு சென்று அதிமுகவை கைப்பற்றும் வேலையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த பத்து நாள்களில் நிலைமை மீண்டும் சசிகலாவுக்கு எதிராக திரும்பியுள்ளதாக கூறுகிறார்கள். சசிகலா எப்போது ஆடியோ ரிலீஸை நிறுத்தினார் என்பதிலிருந்து இதன் பின்னால் உள்ள சங்கதிகளை தெரிந்துகொள்ளலாம். ஜூலை 26ஆம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி சென்று காத்திருந்து மோடி, அமித் ஷாவை சந்தித்து திரும்பினர். அதுவரை சசிகலாவுக்கு எதிராக பேசாத ஓபிஎஸ் ஊர் திரும்பிய மறுநாளே அவரை கட்சிக்குள் அனுமதிக்க முடியாது என பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad