ஜெ., ஈபிஎஸ் படம்... ஸ்டாலின் கெத்து... பிடிஆர் ஆங்கிரி பேர்ட்: அன்பில் மகேஷ் கலகல!
தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அதில், பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலுரை அளித்து பேசிய போது, சட்டப்பேரவையில் சபாநாயகர் கரஸ்பாண்டண்ட்டாகவும்
(correspondent), முதல்வர் ஸ்டாலின் ஹெச்.எம்.ஆகவும் (Head Master) இருந்து வழிநடத்தும் அவையில் இருப்பது பெருமை என்றார்.
தொடர்ந்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நியாயத்திற்கு மட்டும் கோபப்படும் ஆங்கிரி பேர்ட் (Angry bird) எனக் குறிப்பிடுவோம் என்று அன்பில் மகேஷ் தெரிவித்தபோது அவையில் சிரிப்பலை உண்டானது.
மேலும் அன்பில் மகேஷ் பேசுகையில், பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.32,599.54 கோடி தொகை மக்களின் வரிப்பணம் எனவும், அதை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர்
அறிவுரை வழங்கியதாவும் கூறினார்.
கடந்த ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக கொள்முதல் செய்யப்பட்ட 65 லட்சம் விலையில்லா புத்தகப்பைகளில் முன்னாள் அதிமுக முதலமைச்சர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது குறித்து, முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டதை சுட்டிக்காட்டிய
அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதனை ரூ.13 கோடியில் செலவில் மாற்றலாம் என்று யோசனை கூறினோம்.
ஆனால், இது மக்களின் வரிப்பணம். ரூ.13 கோடி இருந்தால் அதை பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வேறு திட்டம் செயல்படுத்துவேன். அந்த புத்தகப்பையில் அவர்களின் படமே இருந்துவிட்டுப் போகட்டும் என பெருந்தன்மையுடன் முதல்வர் ஸ்டாலின்
தெரிவித்ததையும் குறிப்பிட்டு பேசினார்.
No comments:
Post a Comment