அழகிரியை விடாமல் துரத்தும் பாஜக: ஆமா, தேர்தல் வருதுல்ல! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

அழகிரியை விடாமல் துரத்தும் பாஜக: ஆமா, தேர்தல் வருதுல்ல!

அழகிரியை விடாமல் துரத்தும் பாஜக: ஆமா, தேர்தல் வருதுல்ல!

அரசியல் வேண்டாம் என மு.க.அழகிரி ஒதுங்கியிருந்தாலும் அரசியல் யூகங்களும், வியூகங்களும் அவரைச் சுற்றி தொடர்ந்து வருகின்றன.
திமுகவை பலவீனப்படுத்த முடியாவிட்டாலும் அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பையாவது உருவாக்கலாம் என பாஜக தேர்தலுக்கு முன்னரே திட்டமிட்டது. அதன் ஒரு அங்கமாகத்தான் மு.க.அழகிரியை தனிக் கட்சி தொடங்க தூண்டியதாக அப்போதே கூறப்பட்டது. ஆனால் கடைசி வரை ஆலோசனை செய்து வருகிறோம் என்றே தேர்தலை கடத்திவிட்டார் அழகிரி.

தேர்தலுக்கு பின்னர் ஸ்டாலின் - அழகிரி தொலைபேசியில் பேசிக்கொண்டனர். பதவியேற்பு விழாவுக்கு அவருக்கு அழைப்புவிடுக்க அழகிரியின் மகன் குடும்பத்தோடு கலந்துகொண்டார். இதனால் அழகிரி - ஸ்டாலினுக்கு இடையே இருந்ததாக கூறப்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது.

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் பாஜக மீண்டும் மு.க.அழகிரி விவகாரத்தை கையிலெடுத்துள்ளது. “விரைவில் மதுரையிலிருந்து மு.க.அழகிரியும் பாஜகவில் இணைகின்ற நாளை நாம் உருவாக்கி காட்டுவோம்” என நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாஜகசி.பி.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

பா.ஜ.க சார்பில் நடைபெறும் மக்கள் ஆசி யாத்திரையின் இரண்டாம் நாளான நேற்று, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


முன்னதாக சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும் போது, “தமிழகத்தில் தாமரை மலரப்போகும் நாள் உருவாக போகிறது. அந்த நாள் வரப்போகிறது என்பதற்கு தான் வி.பி.துரைசாமி, ராமலிங்கம் ஆகியோர் வந்து பறைசாற்றுகிறார்கள். நாம் ஒரு நாளை உருவாக்க போகிறோம். விரைவில் மதுரையில் இருந்து அழகிரியும் பா.ஜ.க-வில் இணைகின்ற நாளை நாம் உருவாக்கி காட்டுவோம். இன்று 4 இடங்களை பெற்றுள்ள நாம் 140 இடங்கள் பெறும் வரை அயராது உழைக்க வேண்டும்” என்று பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad