பாஜகவுக்கே பால்காவடி எடுத்தாலும்.. : ராஜேந்திர பாலாஜிக்கு இப்படி ஒரு சிக்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

பாஜகவுக்கே பால்காவடி எடுத்தாலும்.. : ராஜேந்திர பாலாஜிக்கு இப்படி ஒரு சிக்கல்!

பாஜகவுக்கே பால்காவடி எடுத்தாலும்.. : ராஜேந்திர பாலாஜிக்கு இப்படி ஒரு சிக்கல்!

அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக் கருத்துகளுக்கு பேர் போனவர். மோடி எங்கள் டாடி என்பது போல் பல கமெண்டுகளை கொடுத்து சோஷியல் மீடியாவில் டிரெண்டாகியவர். அதேசமயம் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் குறைவில்லை.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், பால் விநியோகத்தில் பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்ததாகவும், ஆவின் நியமனங்களில் ஊழல் செய்ததாகவும், ஸ்வீட் பாக்ஸ்களை எடுத்துச் சென்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த குறி யார் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் அண்மையில் டெல்லி சென்ற ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நேற்று திருவள்ளூரில் நேரடி கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத் துறை அமைச்சர் நாசரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “பாஜகவுக்குச் சென்றால் மட்டும் விட்டுவிடுவோமா என்ன? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்துள்ளார். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு பின்வாங்குவதாக ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கூறியதற்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். “திமுக அரசின் திட்டங்களை சாதாரண மக்களும் பாராட்டுவதால், எல்.முருகன் பொறாமை காரணமாக அது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார்” என்று விமர்சனம் செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad