தலிபான் ஸ்டைல் அட்டாக்; பெட்ரோல் போட ஆப்கன் போங்க: பாஜக சர்ச்சை பேச்சு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

தலிபான் ஸ்டைல் அட்டாக்; பெட்ரோல் போட ஆப்கன் போங்க: பாஜக சர்ச்சை பேச்சு!

 தலிபான் ஸ்டைல் அட்டாக்; பெட்ரோல் போட ஆப்கன் போங்க: பாஜக சர்ச்சை பேச்சு!

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ளதால் ஆப்கனில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அங்கிருந்து பலரும் வெளியேற முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆப்கனையும், தலிபான்களையும் வைத்து இங்குள்ள பாஜக பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசு வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பாஜகவிற்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, திரிபுராவில் பாஜக ஆட்சியை அகற்றிவிட்டு அங்கு காலூன்ற திரிணாமூல் காங்கிரஸ் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பவுமிக்கிற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய திரிபுரா மாநில பாஜக எம்.எல்.ஏ., அருண் சந்திர பவுமிக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட திரிணாமூல் கட்சிக்காரர்கள் திரிபுரா பாஜக அரசை சேதப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் இங்கு விமான நிலையத்தில் இறங்கினால், தலிபான்கள் பாணியில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களை தாக்குமாறு உங்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.

அதேபோல், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான ராம் ரத்தன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பெட்ரோ, டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பெட்ரோல், டீசல் குறைவான விலையில் தேவைப்பட்டால் ஆப்கானிஸ்தான் செல்லுங்கள். அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்குக் கிடைக்கும். அதனால் ஒரு பயனும் இல்லை. அங்கு உயிருக்கே உத்தரவாதம் இல்லை. இந்தியாவில் நீங்கள் முழு பாதுகாப்புடன் இருக்கிறீர்கள் என்றார்.பாஜக நிர்வாகிகளின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.எல்.ஏ., அருண் சந்திர பவுமிக்கை கைது செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அவர் தெரிவித்தது அவரது சொந்த கருத்து எனவும், கட்சி அதற்குப் பொறுப்பேற்காது எனவும் பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad