கூட்டுறவுத் துறையில் இத்தனை அறிவிப்புகளா? வெளியிட்டார் அமைச்சர் பெரியசாமி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

கூட்டுறவுத் துறையில் இத்தனை அறிவிப்புகளா? வெளியிட்டார் அமைச்சர் பெரியசாமி

கூட்டுறவுத் துறையில் இத்தனை அறிவிப்புகளா? வெளியிட்டார் அமைச்சர் பெரியசாமி

சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை கொள்ளை விளக்க குறிப்பை அமைச்சர்
ஐ.பெரியசாமி பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

“*கூட்டுறவு துறையில் 3939 காலி பணியிடங்கள் உள்ளன. அவை அனைத்தும் விரைவில் நிரப்படும்.

*மகளிர் சுய உதவி குழுவில் உள்ள பெண்கள் கூட்டுறவு வங்கி கடனில் உறுப்பினர்களாக சேர்க்கப்படும்

*வாடகை கட்டிடத்தில் இருக்கும் நியாய விலை கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டி தரப்படும். ( 7 இலட்சம் மதிப்பில் பகுதி நேர நியாயவிலை கட்டிடம் மற்றும் 10 இலட்சம் மதிப்பில் முழு நேர கடை கட்டப்படும்.*கூட்டுறவு மருந்தகங்கள் 600 ஆக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*கூட்டுறவு சங்கங்களில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்துதல்..

*பொள்ளாச்சி கூட்டுறவு புதிய அலுவலகம் கட்டப்படும்

*ஈரோடு,சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர் ,தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் தானியங்கி ஏடிஎம் அமைக்கப்படும்.

*கூட்டுறவு சங்கங்களின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் கலை கல்லூரி கட்டப்படும்.

*கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கும் வரம்பு 10 இல் இருந்து 15 இலட்சமாக உயர்த்தப்படும்.

*மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு வட்டி விகிதம் 12 இல் இருந்து 7 ஆக குறைக்கப்படும்..

*கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவீதம் கடன் வழங்கப்படும்

*ஈரோடு மங்களம் மஞ்சல் மற்றும் பென்னகரம் புளி ஆகியவற்றை இந்திய அளவில் விறபனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*தமிழகம் முழுவதும் லாபத்தில் இயங்கும் 500 கூட்டுறவு வங்கிகளை மேமடுத்தப்பட்ட சேவை மையமாக தரம் உயர்த்தப்படும்.” என அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad