ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல தடை: தமிழக அரசு அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 30, 2021

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல தடை: தமிழக அரசு அதிரடி!

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல தடை: தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு பொது மக்கள் செல்ல தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், ஊரடங்கு தளர்வுகள், பள்ளிகள் திறப்பு குறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த முறை அளிக்கப்பட்ட ஊடரங்கு தளர்வுகளில், கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதாவது செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல், பொது மக்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது மக்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad