செல்லூர் ராஜூ இப்படி பண்ணலாமா? முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

செல்லூர் ராஜூ இப்படி பண்ணலாமா? முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்!

செல்லூர் ராஜூ இப்படி பண்ணலாமா? முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்!

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்றைய தினம் (ஆகஸ்ட் 25) சட்டசபையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ, மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

சர்ச்சையில் கலைஞர் நூலகம்

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், பென்னிகுயிக் நினைவிடத்தினை மாற்றி, அப்புறப்படுத்தி, அந்த இடத்திலே கலைஞர் பெயரால் அமையவிருக்கக்கூடிய நூலகம் கட்டப்படவிருக்கிறது என்ற ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே இது சட்டமன்றத்திற்கு வெளியிலேயும் பேசப்பட்டிருக்கிறது, அப்பொழுதும் பொதுப்பணித் துறை அமைச்சர் அவர்கள் மூலமாக விளக்கம் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் பதில்

இப்போதும் சொல்கிறேன். நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். நிச்சயமாக அதை நாங்கள் மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. ஒரு தவறான பிரச்சாரத்தினைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அது சட்டமன்றத்திலும் பதிவாகக் கூடாது என்பதற்காகத் தான் இந்த விளக்கத்தினை நான் சொல்லியிருக்கிறேன்

ஆதாரம் எங்கே?

இப்படிச் சொல்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் ஒரு முன்னாள் அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தற்போது மூன்றாவது முறையாக அவைக்கு வந்திருப்பதாகச் சொல்லியிருக்கின்றீர்கள். எனவே, அப்படி நீங்கள் சொல்வது உங்களுடைய பெருந்தன்மையைக் குறைப்பதாக இருக்கிறது. எனவே ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் என்று முதல்வர் தெரிவித்தார்.

மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். முழுவதும் குளிரூட்டப்பட்ட ஏழு தளங்களைக் கொண்டதாக 24 பகுதியாக பிரிக்கப்பட்டு கலைஞர் நூலகம் அமையவுள்ளது. ஒரேநேரத்தில் 600 வாசகர்கள் அமர்ந்து வாசிக்கும் வகையில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad