அப்படி போடு: ஸ்டாலினின் அடுத்த அதிரடி அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

அப்படி போடு: ஸ்டாலினின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

அப்படி போடு: ஸ்டாலினின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

கடந்த 1971ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. இக்குழுவானது முதல்வரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் பரிந்துரைகள் அளிக்கப்படுகிறது. இந்த குழுவானது கடந்த 2020ஆம் ஆண்டில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மாநில வளர்ச்சி கொள்கை குழுவை திருத்தியமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கீழ் இயங்கும் மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டார். பேராசிரியர் ராம.சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்ட 8 பேர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.இக்குழு அமைக்கப்பட்டதுமே அதில் உள்ள உறுப்பினர்களின் தேர்வுக்காக முதல்வர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டப்பட்டார். இக்குழுவினர் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு மாநில அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, மாநில வளர்ச்சிக் கொள்கை குழு மீண்டும் மாநில திட்டக்குழுவாக பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad