அதிமுக அரசு செய்யவில்லை, திமுக அரசு செய்துகாட்டுமா? கமல் ஹாசன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 29, 2021

அதிமுக அரசு செய்யவில்லை, திமுக அரசு செய்துகாட்டுமா? கமல் ஹாசன்!

அதிமுக அரசு செய்யவில்லை, திமுக அரசு செய்துகாட்டுமா? கமல் ஹாசன்!

தமிழகத்தில் சுமார் 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்த சூழலில் நடப்பு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி மாற்றுத்திறனாளிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. அதில் மாற்றுதிறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்பட வேண்டும்.

இடஒதுக்கீடு

ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000-ம், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,000-ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. தமிழகத்திலும் இது நடைமுறைக்கு வரவேண்டும். அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். பார்வைக் குறைபாடு உடையவர்கள் கல்வி கற்க தஞ்சாவூர், திருச்சி, சென்னை போன்ற மாவட்டங்களில் உயர்நிலை, மேல்நிலை என சுமார் 10 சிறப்புப் பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

கட்டமைப்பு வசதிகள்

இவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க மாவட்டங்கள்தோறும் சிறப்புப் பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும். அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரை, திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் படியான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் பயணம் செய்யும் உதவியாளர்களும் அரசின் சாதாரணப் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்ற சலுகையானது, நகரப்பேருந்துகளில் மட்டுமல்லாது அனைத்துப் பேருந்துகளுக்கும் விரிவாக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad