ரேஷன் கார்டு தாமதம்; தமிழக மக்களுக்கு இப்படியொரு சிக்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 29, 2021

ரேஷன் கார்டு தாமதம்; தமிழக மக்களுக்கு இப்படியொரு சிக்கல்!

ரேஷன் கார்டு தாமதம்; தமிழக மக்களுக்கு இப்படியொரு சிக்கல்!

தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் நியாய விலைக்கடைகள் மூலம் மலிவு விலையில் உணவுப் பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. மொத்தமுள்ள 34,773 நியாய விலைக் கடைகளில் 2.17 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனாளர்களாக இருக்கின்றனர். இதன்மூலம் 6.88 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். தொடக்கத்தில் சிறிய புத்தகம் போன்று வழங்கப்பட்டு வந்த ரேஷன் கார்டுகள், தற்போது ஸ்மார்ட் கார்டுகளாக நவீனமயமாக்கப் பட்டுள்ளன.

ஆன்லைன் வசதி

இதற்காக ஆதார் பதிவுகள் மூலம் பொதுமக்களின் விவரங்கள் சரிபார்க்கப் படுகின்றன. புதிதாக ஸ்மார்ட் கார்டுகள் பெறுவதற்கு ஆன்லைன் வாயிலான வசதிகளை தமிழக அரசு செய்து தந்துள்ளது. அதன்படி, tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் புதிய ஸ்மார்ட் கார்டுகள் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் நகல் மின்னணு ஸ்மார்ட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க,

என்னென்ன வசதிகள்?

புதிய உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க, அட்டை தொடர்பான சேவை நிலை அறிய என பல்வேறு வசதிகளை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஒரிஜினல் ஸ்மார்ட் கார்டுகள் தொலைந்து விட்டால், மேற்குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று டூப்ளிகேட் ஸ்மார்ட் கார்டுகள் பெற விண்ணப்பிக்கலாம்.

தாமதப்படுத்தும் அதிகாரிகள்

அதனை உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்கள் மற்றும் ஆணையர்கள் அல்லது வட்ட வழங்கல் அதிகாரிகள் சரிபார்த்து ஒப்புதல் தருவர். பின்னர் கார்டு அச்சிடப்பட்டு தயாரானதும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் வழங்கப்படும். இதற்காக 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த சூழலில் கொரோனா ஊரடங்கு, சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் டூப்ளிகேட் ஸ்மார்ட் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது.

இதேநிலை தற்போதும் தொடர்வதாக சில பயனாளர்கள் கூறுகின்றனர். டூப்ளிகேட் ஸ்மார்டுக்கு விண்ணப்பித்து அதனை வழங்க அதிகாரிகள் தாமதம் செய்வதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்த விஷயத்தில் உணவுத்துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad