ஸ்டைலா, கெத்தா அசத்திய திருப்பதி; மாஸ் காட்டிய தேவஸ்தானம்!
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் ஏழுமலையான் திருக்கோயில் தரிசனம், பக்தர்களுக்கான வசதிகள், சுற்றுச்சூழல் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. கொரோனா நெருக்கடியால் பக்தர்களின் வருகை குறைவாக இருந்த நிலையில், தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இதன்மூலம் தேவஸ்தானத்திற்கு உண்டியல் வசூலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
வாடகைக் கார்கள் பயன்பாடு
திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளின் வசதிக்காக 60 வாடகைக் கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் 40 கார்கள் உள்ளூரிலும், 20 கார்கள் நீண்ட தூர பயணத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த டீசல், பெட்ரோல் கார்களுக்கு 24 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை மாத வாடகையாக தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இதன்மூலம் ஆண்டிற்கு 1.15 கோடி ரூபாய் வரை செலவாகிறது.
புதிய யோசனை
இவற்றில் நிரப்பப்படும் எரிபொருள் பயன்பாட்டால் திருமலையில் சுற்றுச்சூழல் மாசு அடைந்து
வருகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில் மாற்று யோசனை முன்னெடுக்கப்பட்டது. அதாவது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
புதிதாக எலக்ட்ரிக் கார்கள்
அதன்படி டாடா நிறுவனத்துடன் கைகோர்த்த தேவஸ்தானம், புதிதாக 35 எலக்ட்ரிக் கார்களை வாங்கியுள்ளது. இவற்றை
ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் செல்ல முடியும். இதையொட்டி திருமலை மற்றும் திருப்பதியில் சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment