விரைவில் புதிய ரேசன் கார்டுகள்: மகிழ்ச்சி செய்தி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

விரைவில் புதிய ரேசன் கார்டுகள்: மகிழ்ச்சி செய்தி!

விரைவில் புதிய ரேசன் கார்டுகள்: மகிழ்ச்சி செய்தி!

தமிழகத்தில் ரேசன் கார்டுகள் இல்லாத பழங்குடியினர் குடும்பத்திற்கு ரேசன் கார்டுகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க பழங்குடியின நலத்துறை செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 1.5 சதவிகிதம் மக்கள் பழங்குடியினர் உள்ளனர். தமிழகத்தில் 36 பழங்குடியினர் மற்றும் துணை பழங்குடியின இனங்கள் உள்ளன. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பழங்குடியின மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

தமிழக அரசு கொரோனா நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாயையும், 14 முக்கிய சமையல் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் வழங்கியது. ஆனால், பழங்குடி இனத்தை சேர்ந்த பல மக்கள் ரேசன் கார்டு இல்லாத காரணத்தால் இந்த நிவாரணத்தை பெற இயலவில்லை. தமிழகத்தின் பொது விநியோகத் திட்டம் அனைவருக்கும் உணவு கிடைப்பதை, குறிப்பாக ஏழை மக்கள் உணவு பெறுவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது.

ஆனால், பழங்குடியின மக்கள் பலர் ரேசன் கார்டு இல்லாததால் அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாத நிலை உள்ளது. எனவே, பழங்குடியினர் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு ரேசன் கார்டுகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி துரைசாமி அமர்வு, “மனுதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் புதிதாக மனு அளிக்கவும், அதனடிப்படையில், முறையாக ஆய்வு செய்து ரேசன் கார்டுகள் இல்லாத பழங்குடியினர் குடும்பத்திற்கு ரேசன் கார்டுகளை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad