தமிழக அரசு வெளியிட்ட 28 சூப்பர் அறிவிப்புகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

தமிழக அரசு வெளியிட்ட 28 சூப்பர் அறிவிப்புகள்!

தமிழக அரசு வெளியிட்ட 28 சூப்பர் அறிவிப்புகள்!

தமிழக சட்டப் பேரவையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் 28 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் .
“1. 5,780 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஊரக சாலைகளை மேம்படுத்துதல்,வலுப்படுத்துதல் மற்றும் 121 பாலங்கள் கட்டுதல் ஆகிய பணிகள் 2,097 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

2. நிலத்தடி நீரை அதிகரிக்கவும் நீர் பாசன தேவைகளை நிறைவேற்றவும் 1149 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் உறிஞ்சு குழிகள் கிணறுகள் மற்றும் இதர பசுமையாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

3. ஏற்கனவே கட்டப்பட்டுள்ள பழைய சமத்துவபுரங்களில் உள்ள வீடுகள், குடிநீர் கட்டமைப்பு , தெருவிளக்குகள், போன்றவற்றை சீரமைக்கும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்

4. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 12,565 நூலகங்கள் படிப்படியாக புதுப்பிக்கப்படும்.


5. 916.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊரகப் பகுதிகளில் சொத்துக்களை உருவாக்கி அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

6. சிறப்பான சேவைகள் வழங்குவதற்காக 550 கிராம ஊராட்சி அலுவலகக் கட்டிடங்கள், 15 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் 500 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் 233.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

7. திட்ட கண்காணிப்பு பணி வலுப்படுத்துவதற்காக மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலர்களுக்கு 68 புதிய வாகனங்கள் வழங்கப்படும்.


8. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

9. சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது தோற்றுவிக்கப்பட்டு மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் 37 கிராம ஊராட்சிகளுக்கு தலா 7.5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் முன்மாதிரி கிராம விருது கேடயமும் வழங்கப்படும். மேலும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் 3 முன்மாதிரி கிராம விருதுகள் வழங்கி அதற்கான கேடயமும் தலா 15 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்

10. பாதுகாக்கப்பட்ட குடிநீரை உறுதி செய்யும் பொருட்டு நீரின் தரத்தை பரிசோதிப்பது சுய உதவிக்குழு பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ரூபாய் 10.92 கோடி மதிப்பீட்டில் 12,525 ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 62,625 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.11. ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள கணக்குகள் பதிவர்கள் மற்றும் படிவங்கள் எளிமைப் படுத்தப்பட்டு முறைப்படுத்தப்படும்.

12. ஊரகப் பகுதிகளில் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் 84.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்

No comments:

Post a Comment

Post Top Ad