ஆக அம்மா இருசக்கர வாகன திட்டம் ரத்தா? - அசெம்பிளியில் அமைச்சர் விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

ஆக அம்மா இருசக்கர வாகன திட்டம் ரத்தா? - அசெம்பிளியில் அமைச்சர் விளக்கம்!

ஆக அம்மா இருசக்கர வாகன திட்டம் ரத்தா? - அசெம்பிளியில் அமைச்சர் விளக்கம்!

ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப் பட்ட திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

அப்போது பேசிய அவர், "பணிக்கு செல்லும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதாகவும் அதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்ததாகவும் அந்த திட்டம் குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை " எனவும் எஸ் பி வேலுமணி குறிப்பிட்டு பேசினார்.

அதற்கு பதிலளித்து பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மானிய விலையில் இருசக்கர வாகன திட்டத்திற்கு போதிய வரவேற்பு இல்லை என பேசிய அமைச்சர், அது தொடர்பாக எந்த ஒரு கோரிக்கை மனுவும் பெறப்படவில்லை என்று பதிலளித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad