வங்கக்கடலில் நிலநடுக்கம்... நில அதிர்வுடன் தப்பிய சென்னை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

வங்கக்கடலில் நிலநடுக்கம்... நில அதிர்வுடன் தப்பிய சென்னை!

வங்கக்கடலில் நிலநடுக்கம்... நில அதிர்வுடன் தப்பிய சென்னை!

சென்னையில் இருந்து வடகிழக்கில் 320 கி.மீ தொலையில் வங்கக்கடலில் 10 கி.மீ ஆழத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அமெரிக்க நில அதிர்வு கண்காணிப்பு மையம் உறுதி செய்துள்ளது.

5.1 ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாயுள்ள நிலநடுக்கத்தால் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட சென்னையின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

வங்கக்கடலின் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சென்னைக்கு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருந்தாலும், இந்த நில அதிர்வு பொதுமக்களை பீதியடைய செய்துள்ளது.சென்னை நகருக்கு அருகில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அண்மைக் காலத்தில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad