ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை ரத்து செய்யும் திமுக அரசு?
பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனத்தை மானிய விலையில் வழங்கும் அம்மா இருசக்கர வாகன திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.
கடந்த 2018 பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தில் டூ வீலரின் விலையில் 50
சதவீதம் அல்லது ரூ.25,000 பயனாளிகளுக்கு மானியமாக அளிக்கப்பட்டு வந்தது.
முந்தைய அதிமுக ஆட்சியில், இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் 250 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தை திமுக அரசு கைவிட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மாநகர பேருந்துகளஇல்
பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பணிக்கு போகும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இருசக்கர வாகன திட்டத்தை அரசு கைவிடப்பட உள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment