அதிமுக துரோகம், வெளிப்பட்ட இரட்டை வேடம்: தங்கம் தென்னரசு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

அதிமுக துரோகம், வெளிப்பட்ட இரட்டை வேடம்: தங்கம் தென்னரசு

அதிமுக துரோகம், வெளிப்பட்ட இரட்டை வேடம்: தங்கம் தென்னரசு

வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காதது துரோகம் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் இந்திய முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு எதிரான சட்டம். இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று.

இன்று சட்டப்பேரவையில், வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்காமல் அதிமுக வெளிநடப்பு செய்ததன் மூலம் துரோகம் இழைத்துள்ளது. விவசாயிகள் நலனில் அக்கறை இருந்திருந்தால் ஆதரித்திருக்க வேண்டும். தெரிந்தே, வேண்டுமென்றே அதிமுக துரோகம் செய்துள்ளது.

இதன் மூலம் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. வேளாண் சட்டங்களை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது, இந்த தீர்மானத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அவர்களின் உள்நோக்கமும் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விவசாயிகள் நலனுக்காக தான் இந்த தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இதில் அரசியல் இல்லை, சட்டமன்றத்தில் அனைத்து பிரதான கட்சிகளும் இடம் பெற்றுள்ளது. அங்கு அவர்கள் கருத்துக்களை தெரிவித்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தியிருக்க வேண்டும்” என கூறினார்.

முன்னதாக தீர்மானத்தை எதிர்த்த அதிமுக சார்பில் பேசிய கே.பி.அன்பழகன், “மத்திய அரசின் இந்த திட்டங்கள் மூலம் விவசாயிகள் வெளிச் சந்தைகளில் விற்று நல்ல லாபம் பெறுகின்றனர். இத்தகைய சூழலில் தமிழக அரசு அவசர தீர்மானம் கொண்டுவர கூடாது. அரசு அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து பேசி இந்த சட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய திருத்தங்களை, லாப நட்டங்களை அறிந்து மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்” என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad