மாதம் தோறும் 1000 ரூ: முதல்வர் தொடங்கி வைத்தார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

மாதம் தோறும் 1000 ரூ: முதல்வர் தொடங்கி வைத்தார்!

மாதம் தோறும் 1000 ரூ: முதல்வர் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாட்டில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 11) தொடங்கி வைத்தார்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரிவோருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சேகர் பாபு என்று அழைப்பதை விட செயல் பாபு என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் கூட்டத் தொடர் முடியும் முன்பே அமலுக்கு வருவது இந்த திட்டம் தான்.24 மணி நேரமும் செயல்படுகிற அமைச்சராக சேகர்பாபு திகழ்கிறார்.. கோயில் நிலங்களும், சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 120 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் வெளியிட்டார். அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. அறநிலையத் துறையின் பொற்காலம் வரவிருக்கிறது.

அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகையாகயால் சுமார் 13 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடையும். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திட்டங்கள் செயல்படுவதை மாதம்தோறும் நானே கண்காணிப்பேன்.. அனைத்து துறைகளையும் முந்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார் சேகர் பாபு. எள் என்று சொல்வதற்கு முன்னால் எண்ணெயாக விரைந்து வேலை செய்கிறார்" என்று பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad