கவலை வேண்டாம், தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் நிவாரணம் அறிவிப்பு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

கவலை வேண்டாம், தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் நிவாரணம் அறிவிப்பு..!

கவலை வேண்டாம், தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் நிவாரணம் அறிவிப்பு..!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பொது இடங்களில் சிலைகளை அமைக்கவும், சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், வீடுகளில் வைத்து கொண்டாடப்படும் சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் இதர இடங்களில் கிறித்தவர்களால் கொண்டாப்படவுள்ள மரியன்னையின் பிறந்த நாள் திருவிழாவின்போது பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவில் குறிப்பிட்டுள்ள அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் வழிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த நிலையில் மதுக்கடைகள், பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசு விநாயகர் சதுர்த்திக்கு ஏன் தடை விதிக்கிறது என்று பாஜகவினரும், இந்து அமைப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்ற பாஜக எம்.எல்.ஏ.வின் கேள்விக்கு பதிலளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “கொரோனா பரவல் காரணமாக வரும் 30ம் தேதி வரை மக்கள் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளார். அதே சமயம் இதனால் பாதிக்கப்படும் தொழிலாளிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

அதன்படி, ''மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சிலை தயாரிக்கும் 3,000 தொழிலாளர்களுக்கு கூடுதலாக 5,000 ரூபாய் என, மொத்தம் 10,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும்" என்று முதல்வர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad