ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்தால் என்ன ஆகும்? தங்கமணி சூப்பர் விளக்கம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்தால் என்ன ஆகும்? தங்கமணி சூப்பர் விளக்கம்

ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்தால் என்ன ஆகும்? தங்கமணி சூப்பர் விளக்கம்

தமிழக அரசு மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேரவையில் தெரிவித்துள்ளார்.
இன்றைய சட்டப்பேரவையில் நடைபெற்ற எரிசக்தி துறை மானிய கோரிக்கையின் போது, குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி பேசுகையில், "தமிழகத்தில் 4 லட்சம் விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்கினோம். இதற்காக தட்கால் திட்டம் கொண்டு வந்தோம்.

மின்மிகை மாநிலம் என்றால் மொத்த தேவையையும் நம்மால் செய்து விட முடியாது. விவசாயிகளுக்கு நிதி நிலையை கருத்தில் கொண்டே மின்சார சேவை வழங்கப்பட்டது. மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தேர்வு, செய்முறை தேர்வு நடத்தினோம். 9700 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் 5 ஆயிரம் பேர் பணி நியமனத்துக்காக தகுதியானவர்கள் இருக்கிறார்கள்.

சூரிய ஒளி மின்சாரம், வனத்துறை அனுமதியோடு வழங்கப்பட்டது. மின்சார வாகன கொள்கையை அரசு பின்பற்ற வேண்டும். கூடங்குளம் 1988-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. 2011 அங்கு நடைபெற்ற போராட்டத்தால் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார். பின்னர் கமிட்டி போட்டு அறிக்கை பெறப்பட்டு, மக்களிடம் பேசி, 500 கோடி நிதி ஒதுக்கி (மத்திய அரசு நிதி) மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தினார்.


மூன்றாவது , நான்காவது அலகுகள் மூலம் அங்கு மின்சாரம் பெற வேண்டும். மின்சார துறை சேவை துறை. ஆகையால் வணிக முறையில் செயல்பட முடியாது. சிஐஜி அறிக்கையை பாராட்டினால் தான் ஆச்சரியப்பட வேண்டும். அவர்கள் அனுமானத்தின் அடிப்படையில் தான் செல்வார்கள்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக முந்தைய மாதம் கட்டணத்தை செலுத்த சொல்லி இருந்தோம். ஆனால் 2019 மே மாதம் செலுத்திய கட்டணத்தை புதிய அரசு செலுத்த சொன்னீர்கள். 10 நாட்களுக்குள் பராமரிப்பு பணி என சொன்னி்ர்கள். 8 லட்சம் கி.மீ., தூரம் மின் வயர் செல்கிறது. மரங்கள் உள்ளன. அனைத்தும் 10 நாட்களில் முடிப்பது என்பது இயலாத காரியம். அதற்கு தொடர் பணி அவசியம்.



காற்றாலை மின்சாரத்தை பொறுத்தவரை, இயற்கை சீற்றத்தால் நின்றால் மற்ற இடங்களில் விலை அதிகமாக இருந்தாலும் மின்சாரம் வாங்கி தான் ஆக வேண்டும். நிலக்கரி கொள்முதல் விசயத்தல் 2000 கோடி அளவுக்கு சேமித்து உள்ளோம். நிலக்கரியை பொறுத்தவரை தங்கமணி மாட்டி கொண்டார் என அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்து உள்ளார். அதனை விசாரித்து கொள்ளுங்கள்.

தமிழக அரசு டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய பரிசீலித்து வருவதாக செய்தித்தாள்களில் படித்தேன். அப்படி ஒரு முடிவை தமிழக அரசு எடுக்கக்கூடாது. கடந்த ஆட்சியில் 1000 மதுபானக் கடைகள் குறைக்கப்பட்டன. தமிழக அரசு மதுபானங்களை ஆன்லைனில் விற்க நேர்ந்தால் சில நேரங்களில் ஆண்கள் ஆர்டர் செய்து விட்டு வெளியே செல்லக்கூடிய சூழல் வரலாம்.


அப்போது வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் அதை வாங்கி வைக்க வேண்டிய நிலை வரும், அதனால் அக்கம் பக்கத்து வீட்டார் அவர்களை தவறாக எண்ணக் கூடிய நிலை உருவாகும். எனவே சமூகத்தில் இது மாதிரியான குழப்ப நிலைகளை தவிர்க்க இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad