இழப்பீடு தொகை 12 லட்சமாக உயர்வு: ஸ்டாலின் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

இழப்பீடு தொகை 12 லட்சமாக உயர்வு: ஸ்டாலின் அறிவிப்பு!

இழப்பீடு தொகை 12 லட்சமாக உயர்வு: ஸ்டாலின் அறிவிப்பு!

சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை முதல்வர்
ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்படும் என்றார். மேலும் அவர் வெளியிட்ட அறிவிப்புகளின் விவரம் பின்வருமாறு:

** வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து தீர்வு காணக்கூடிய வகையில் சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலியில் நான்கு சிறப்பு நீதிமன்றங்கள் கூடுதலாக அமைக்கப்படும்.

** வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான குறைந்தபட்ச இழப்பீடு தொகை 1 லட்சத்திலிருந்து 12 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படும்.

** தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் என்ற புதிய ஆணையம் அமைக்கப்படும்.



** தன்னாட்சி சழஅமைப்புடன் செயல்படக்கூடிய இந்த அமைப்புக்கு நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்.

** ஆதிதிராவிடர் பள்ளிகள் மேற்கண்ட ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும். இங்கு பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கான பயிற்சிகள் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ளும். ஆனால் இத்தகைய ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் உள்ள நிர்வாகம் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபடாது.

** வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டு உள்ள வழக்குகளை கையாள தமிழகத்தில் 18 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. எனினும் இந்த வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து தீர்வு காணக்கூடிய வகையில் கிருஷ்ணகிரி மதுரை திருநெல்வேலி, சேலம் என நான்கு மாவட்டங்களிலும் புதிய நான்கு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மேலும் மதுரையிலும் திருநெல்வேலியிலும் வழக்குகள் கூடுதலாக நிலுவையில் இருப்பதால் அங்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad