உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நாளன்று 2 மணி நேரம் இவர்களுக்கு மட்டும் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நாளன்று 2 மணி நேரம் இவர்களுக்கு மட்டும்

உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நாளன்று 2 மணி நேரம் இவர்களுக்கு மட்டும்

தமிழகத்தில் நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை 9 மாவட்டங்களில் மட்டும் மாவட்ட மறுசீரமைப்பு காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. இதுதொடர்பான வழக்கு விசாணையின்போது மேற்கண்ட மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அண்மையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் வாக்கு பதிவு நாளன்று காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தது.

இந்நிலையில், வாக்குப்பதிவு அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம் என்று நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட செங்கல்பட்டு, நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் மற்றும் 2019 இல் தேர்தல் நடத்தப்பட்ட 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஜூன் 30 வரை ஏற்பட்டுள்ள காலி பதவியிடங்களுக்கு நடைபெறவுள்ள தற்செயல் தேர்தலுக்கான வாக்குபதிவினை வாக்குப்பதிவு நாளன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடத்திட தேர்தலில் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.

மேலும், கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி வாக்குபதிவினை நடத்திட தொற்று உள்ளவர்கள் மட்டும் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குப்பதிவு நாளன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறது'' என இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துளள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad