வரும் செப்டம்பர் 30 முதல்; தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

வரும் செப்டம்பர் 30 முதல்; தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

வரும் செப்டம்பர் 30 முதல்; தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வனம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது. இதையொட்டி
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக 2021-22ஆம் ஆண்டின் கொள்கை விளக்கக் குறிப்பை அமைச்சர் வீ.மெய்யநாதன் வெளியிட்டார். அதில், ’தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை’ என்ற பெயரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் மீது தடிமன் வரைமுறையின்றி கடந்த 25.06.2018 முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

மக்கள் இயக்கம் தொடங்க திட்டம்

எனவே இவற்றின் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விற்பனை, விநியோகம் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை செயல்படுத்த பல்வேறு துறைகளுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எடுத்தது. இருப்பினும் இந்த தடை திறம்பட செயல்படுத்தப்படவில்லை. எனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வர்த்தக சங்கங்கள், சமூக மன்றங்கள், வணிகர் சங்கங்கள், குடிமக்கள் அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகள் மூலம் ‘மக்கள் இயக்கம்’ ஒன்றை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad