காஞ்சிபுரத்தில் ரூ 300 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு: அமைச்சர் அதிரடி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 29, 2021

காஞ்சிபுரத்தில் ரூ 300 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு: அமைச்சர் அதிரடி

காஞ்சிபுரத்தில் ரூ 300 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு: அமைச்சர் அதிரடி

திமுக ஆட்சிக்கு வந்த இந்த மே மாதம் முதல் பல்வேறு அதிரடி சம்பவங்கள் இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்று வருகிறது.
பெரும்பாலும் செய்திகளில் அடிபடாமல் இருக்கும் அறநிலையத் துறையில் அமைச்சர் சேகர்பாபுவின் அதிரடி நடவடிக்கைகளால் பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட அறநிலையத் துறை நிலங்கள் தற்போது பெருமளவில் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் சேகர் பாபுவை செயல் பாபு என பாராட்டிப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “அறநிலையத் துறை ஆணையர் மற்றும் செயலாளர் , இணை ஆணையர் உதவியோடு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்போதே மீட்பு மதிப்பீடு 1000 கோடியை தாண்டிவிட்டது. இந்து சமய அறநிலையத்துறை கணக்கின்படி இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்படும்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமாக 150 கிரவுண்டுகளுக்கு மேலான நிலம் உள்ளது. இதில் 49 கிரவுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. சட்டப்படி ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் 60 கிரவுண்டுகள் மீட்கப்படும். 9 ஏக்கர் அளவிலான மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 300 கோடி ரூபாயாகும். இறை சொத்து இறைவனுக்கே என்னும் தாரக மந்திரத்தோடு, இது போன்ற ஆக்கிரமிப்புகளில் உள்ள நிலங்களை தினந்தோறும் மீட்டு வருகிறோம்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad