இன்னும் 30 நாட்கள் தான் கெடு; சசிகலாவிற்கு அடுத்த சிக்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

இன்னும் 30 நாட்கள் தான் கெடு; சசிகலாவிற்கு அடுத்த சிக்கல்!

இன்னும் 30 நாட்கள் தான் கெடு; சசிகலாவிற்கு அடுத்த சிக்கல்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான
சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில் சிறையில் விஐபி வசதிகள் பெறுவதற்கு சிறைத்துறை டிஜிபி, எஸ்.பிக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி அப்போதைய டிஐஜி ரூபா அவர்கள், பரப்பன அக்ரஹார சிறைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விசாரணை அறிக்கையை மாநில அரசிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது.

சூடுபிடிக்கும் வழக்கு விசாரணை

அதன் முடிவில் சிறைத்துறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. உடனே இந்த வழக்கை ஊழல் தடுப்பு படைக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த சூழலில் வழக்கு விசாரணை மந்தமாக நடைபெற்று வருவதாக கூறி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் முதல்கட்ட விசாரணையை நடத்தி ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள்

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

அதனை ஏற்று ஊழல் தடுப்பு படை அதிகாரிகளும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர். அதன்படி, நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, குற்றம்சாட்டப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கெடு விதித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்

அதற்க ு பதிலளித்த ஊழல் தடுப்பு படை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் டிஜிபி சத்தியநாராயணா, எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தனர். இதை கேட்ட நீதிபதிகள் மிகவும் அதிருப்தி அடைந்தனர். இவ்வளவு நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad