சிஏஏ-வை ரத்து செய்ய தீர்மானம்; முதல்வருக்கு இப்படியொரு பாராட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

சிஏஏ-வை ரத்து செய்ய தீர்மானம்; முதல்வருக்கு இப்படியொரு பாராட்டு!

சிஏஏ-வை ரத்து செய்ய தீர்மானம்; முதல்வருக்கு இப்படியொரு பாராட்டு!

தமிழக சட்டமன்றத் தொடரில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர்
மு.க.ஸ்டாலின் இன்று தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசுகையில், கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டமானது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று பேரவை கருதுகிறது. இந்த சட்டமானது அகதிகளாக இந்த நாட்டிற்கு வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல் மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொருத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டது தெளிவாக தெரிகிறது.

இலங்கை தமிழர்கள் விவகாரம்

அகதிகளாக வருபவர்களை சக மனிதனாக பார்க்க வேண்டும் ஏற்கனவே துன்பப்பட்ட மக்களை மேலும் துன்பப்படுத்தக் கூடாது. மத்திய அரசு இலங்கை தமிழர்களை வேறாகப் பிரித்துப் பார்க்கிறது. அதனால் தான் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறோம். குடியுரிமை திருத்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டையும் கைவிட வேண்டும். எனவே இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் இந்திய குடியுரிமைத் திருத்த சட்டம் 2019ஐ ரத்து செய்திட மத்திய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது என்று குறிப்பிட்டார்.

விசிக வரவேற்பு

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம். இந்த சட்டம் மத அடிப்படையிலும், இன அடிப்படையிலும் பாரபட்சம் காட்டுகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14 க்கு எதிரானதாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad