தமிழகத்திற்கு புதிய அரசு கல்லூரிகள்; அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

தமிழகத்திற்கு புதிய அரசு கல்லூரிகள்; அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்திற்கு புதிய அரசு கல்லூரிகள்; அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இன்றைய தினம் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடைபெறுகிறது. காலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

மானியக் கோரிக்கை மீது விவாதம்

இதற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களான எஸ்.எஸ்.சிவசங்கர், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்து வருகின்றனர். இதையடுத்து மாலை 5 மணிக்கு அவை கூடியதும், போக்குவரத்துத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. அதற்கு அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து பேசவுள்ளனர்.

புதிய கல்லூரிகள் திறப்பு

இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி சட்டமன்றத்தில் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, நடப்பாண்டு புதிதாக 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். இதில் உயர் கல்வித்துறை சார்பில் 10 கல்லூரிகள், அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள், கூட்டுறவுத்துறை சார்பில் ஒரு கல்லூரி அடங்கும். இனிவரும் காலங்களில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கலைக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad