சென்னை மக்களுக்கு பெரிய ஆபத்து; அதிர்ச்சியூட்டும் சி40 ஆய்வு முடிவுகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 29, 2021

சென்னை மக்களுக்கு பெரிய ஆபத்து; அதிர்ச்சியூட்டும் சி40 ஆய்வு முடிவுகள்!

சென்னை மக்களுக்கு பெரிய ஆபத்து; அதிர்ச்சியூட்டும் சி40 ஆய்வு முடிவுகள்!

சி40 நகரங்கள் அமைப்பானது ”காற்று மாசிலிருந்து சென்னை மக்களின் உயிரைக் காப்பதற்கான வழி” என்ற பெயரில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் அனல்மின் நிலைய உற்பத்தித் திறனை 64 GW (ஜிகா வாட்டாக) அதிகரிப்பதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், சென்னையில் மட்டும் அனல் மின் நிலைய காற்று மாசின் விளைவாக ஏற்படும் வருடாந்திர உயிரிழப்புகள் தற்போதைய நிலையை விட இருமடங்காக அதிகரிக்கும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளில், தங்கள் சாராசரி ஆயுட்காலத்திற்கு குறைவாக உயிரிழப்போரின் எண்ணிக்கை தற்போதைய நிலையைவிட 60% அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


சென்னை மக்களுக்கு அதிக பாதிப்பு

புதிய அனல் மின் திட்டங்களை செயல்படுத்தினால் உடல் நலக்குறைவால் எடுத்துக் கொள்ளப்படும் விடுப்பு நாட்கள் 2030ஆம் ஆண்டில் சென்னையில் மட்டும் 22 லட்சம் நாட்களாக இருக்கும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது. நிலக்கரியால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் காரணமாக பிற சி40 நகரங்களை விடவும் சென்னை நகர மக்களின் உடல்நலன் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்தியாவில் அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தியில் 11% நகர்ப்புறத்திலிருந்து 500 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ளாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

அனல்மின் நிலை விபரீதங்கள்

நிலக்கரியை எரித்து மின் உற்பத்தி செய்யப்படும் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியாகும் காற்று மாசுபாடு நீண்ட தொலைவுக்கு பயணிக்கக் கூடியது என்பதாலும், அதனால் ஏற்படும் தாக்கம் அதிகம் என்பதாலும் அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக விளிம்பு நிலையில் வசிக்கும் இளைஞர்கள், முதியோர், கருவுற்ற பெண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மாற்று வழி என்ன?

தற்போது முன்மொழியப்பட்டுள்ள அனல் மின் விரிவாக்கம் தொடருமானால் சென்னையைச் சுற்றியுள்ள அனல்மின் நிலையங்களினால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் விளைவாக ஏறத்தாழ 22 லட்சம் நாட்களுக்கு தொழிலாளர்கள் உடல்நலக் காரணங்களால் விடுப்பு எடுப்பார்கள் என்கிறது சி40 ஆய்வு. மேலும், உடல்நலன் சார்ந்த செலவினங்கள் 2020-2030ஆம் ஆண்டு காலகட்டத்தில் 5.9 பில்லியன் அமெரிக்கா டாலர்களாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad