புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள்: அடேங்கப்பா, இவ்வளவு பேரா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 29, 2021

புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள்: அடேங்கப்பா, இவ்வளவு பேரா?

புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள்: அடேங்கப்பா, இவ்வளவு பேரா?

கொரோனா நிவாரண நிதி, நிவாரணப் பொருள்கள், பொங்கல் பரிசு ஆகியவை பெற ரேஷன் அட்டைகள் கட்டாயம். இதனால் புதிதாக ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது.
ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு தாமதம் செய்யாமல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் மிக அதிகளவில் விண்ணப்பங்கள் வந்ததால் ஊழியர்களால் சான்றிதழ் சரிபார்ப்பு செய்து, கொடுக்கப்பட்ட முகவரிக்கு சென்று உறுதிப்படுத்த கால தாமதம் ஆனது.

இந்த நிலையில், மே மாதம் முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 54 ஆயிரத்து 327 நபர்கள் புதிய ஸ்மார் கார்டு கோரி விண்ணப்பித்திருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதில், 7 லட்சத்து 28 ஆயிரத்து 703 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, 2 லட்சத்து 61 ஆயிரத்து 844 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், 6 லட்சத்து 65 ஆயிரத்து102 விண்ணப்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், 63 ஆயிரத்து 601 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருவதாகவும், 63 ஆயிரத்து 780 விண்ணப்பங்கள் வைப்பில் உள்ளதாகவும் உணவு வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக, தென் சென்னையில் 67 ஆயிரத்து 051 நபர்கள் விண்ணப்பித்ததில், 36 ஆயிரத்து 815 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 12 ஆயிரத்து 754 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 27 ஆயிரத்து 829 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதோடு,8 ஆயிரத்து 986 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad