எங்கே போனார் உதயநிதி ஸ்டாலின்? சிண்டிகேட் கூட்டத்திற்கு ஆப்சென்ட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 29, 2021

எங்கே போனார் உதயநிதி ஸ்டாலின்? சிண்டிகேட் கூட்டத்திற்கு ஆப்சென்ட்!

எங்கே போனார் உதயநிதி ஸ்டாலின்? சிண்டிகேட் கூட்டத்திற்கு ஆப்சென்ட்!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு உதயநிதி ஸ்டாலின் முதல்முறை எம்.எல்.ஏ ஆனார். இதையடுத்து தனது தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறார். அடிக்கடி தனது தொகுதிக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டது, தடுப்பூசி முகாம்களை அதிக அளவில் நடத்தியது என மற்ற திமுக எம்.எல்.ஏக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கொரோனா தடுப்பூசி திட்டம்

தமிழக சட்டமன்றத்திலும் தனது முதல் கன்னிப் பேச்சை நிகழ்த்தி தனி முத்திரை பதித்தார். சமீபத்தில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் சிறப்பு திட்டம் ஒன்றை தொடங்கி வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதாவது, தொகுதியில் உள்ள மக்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒலி பெருக்கியுடன் வீதி, வீதியாக செல்லும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சரியான நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

சிண்டிகேட் உறுப்பினர் பதவி

இதற்கு தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னதாக தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும் சிண்டிகேட் குழு உறுப்பினராக திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சபாநாயகர் அப்பாவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்முறை பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டம் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு வராததால் சர்ச்சை

இதில், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு, 500க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்வது, புதிய பேராசிரியர்களை நியமனம் செய்வது, பாடத்திட்டத்தில் மாற்றம், புதிய கல்விக் கொள்கை, பேராசிரியர்கள் ஓய்வு வய்தை 60ஆக உயர்த்துதல், புதிய பதிவாளர் நியமனம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற்ற முதல் கூட்டம் என்பதால், உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad