அதிமுகவில் இணைகிறாரா திவாகரன்? பின்னணியில் சசிகலாவா?
அதிமுகவுக்குள் சசிகலா எப்போது என்ட்ரி ஆவார், அதிமுக - அமமுக இணைப்பு சாத்தியமா, அதிமுகவுக்குள் இருக்கும் அதிகார மோதல் எப்போது சரியாகும் என பல கேள்விகள் அதிமுகவைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில் திவாகரனை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர்
16ஆம் தேதி திருவண்ணாமலையில் தினகரன் மகள் ஜெயஹரினியின் திருமண விழாவில் மன்னார்குடி சொந்தங்கள் கலந்துகொண்ட போது திவாகரன் மட்டும் மன்னார்குடி அருகேயுள்ள சேரங்குளம் கிராம கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் காமராஜும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
அப்போது திவாகரனும் காமராஜும் தனியாக பத்து நிமிடம் பேசினர். காமராஜ் தோள் மீது கை போட்டு திவாகரன் பேசிய புகைப்படம் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியது.
சசிகலா குடும்பத்துடன் எந்த உறவையும் பேணக்கூடாது என அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கூறப்பட்டுள்ளது. ஆனாலும் திவாகரனுடன் டெல்டா பகுதி அதிமுக முக்கிய புள்ளிகள் பேசிவருவதாக கூறுகிறார்கள். சசிகலாவை விட தினகரனே எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்ததாகவும்
அதனால் அவரை எதிர்க்கும் திவாகரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தவறில்லை என்ற முடிவுக்கு வந்தார்களோ என்னவோ, காமராஜ் உட்பட யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை
No comments:
Post a Comment