அரசுப் பள்ளி ஆசிரியர் காலிப் பணியிடங்கள்; வெளியான ஹேப்பி நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 29, 2021

அரசுப் பள்ளி ஆசிரியர் காலிப் பணியிடங்கள்; வெளியான ஹேப்பி நியூஸ்!

அரசுப் பள்ளி ஆசிரியர் காலிப் பணியிடங்கள்; வெளியான ஹேப்பி நியூஸ்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2,207 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில், தமிழ் 277, ஆங்கிலம் 193, கணிதம் 115, இயற்பியல் 97, வேதியியல் 194, தாவரவியல் 92, விலங்கியல் 110, வணிகவியல் 313, பொருளியியல் 291, வரலாறு 118, புவியியல் 12, அரசியல் அறிவியல் 14, மனை அறிவியல், இந்திய கலாச்சாரம் ஆகியவற்றில் தலா 3, உயிர் வேதியியல் 1,

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்

உடற்கல்வி இயக்குநர் 39, கணினி 44 உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் மொத்தம் 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்கும் போது தொடர்புடைய பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு, பி.எட் படிப்பு முடித்திருக்க வேண்டும். முக்கியமாக தமிழ் மொழியில் அறிவு பெற்றிருக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் ஒரேபிரிவை முடித்திருக்க வேண்டும்.

போட்டித் தேர்வு அறிவிப்பு

வயது வரம்பை பொறுத்தவரை 1.7.2021 அன்று 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் உரிய சலுகைகள் வழங்கப்படும். முதலில் ஆன்லைன் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறும் நபர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 250 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும்.17.10.2021 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வரும் நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஆசிரியர் பணி மீது ஆர்வமுள்ள தகுதி படைத்தவர்கள் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண் அறிவியல் பட்டதாரி பணியிடங்களுக்கும் விரைவில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad