ஒவ்வொருவரும் இந்தியை கற்க வேண்டும் - வெங்கையா நாயுடு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

ஒவ்வொருவரும் இந்தியை கற்க வேண்டும் - வெங்கையா நாயுடு

ஒவ்வொருவரும் இந்தியை கற்க வேண்டும் - வெங்கையா நாயுடு

பெங்களூருவில் உள்ள க்ரேயா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் நவீன கல்விக்கான படிப்புக்கான மோட்டூரி சத்யநாராயண மையத்தைத் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு கடந்த புதன் கிழமை அன்று திறந்து வைத்தார்.
வெங்கையா நாயுடு '' ஒருவர் தனது தாய்மொழியைத் தவிர இந்தியாவில் அதிகமானோரால் பேசப்படும் இந்தி மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

மேலும் , தாய்மொழியை தவிர இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதற்கான நோக்கம் குறித்தும் விளக்கினார். அப்போது அவர் பேசியதாவது, என்னுடைய மாணவர் பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்று, ஹிந்தி பெயர் பலகையில் தார் பூசி அழித்து இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போது நான் டெல்லியை அடைந்த பிறகு தான் தனது சொந்த முகத்தில் நானே தார் பூசியதாக உணர்ந்தேன்.

இந்தியை கற்றுக்கொண்ட பின்னர் என்னால் துணை ஜனாதிபதி என்ற நிலையை அடைய முடிந்தது. நீங்கள் வளர விரும்பினால், உங்கள் கருத்துக்களை வெகுஜன மக்களுக்கு தெரிவிக்க விரும்பினால், அவர்களின் மொழியை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.



குழந்தைகள் மீது எந்த மொழியும் திணிக்கப்படக்கூடாது அதே சமயம் ஒரு மொழிக்கு எந்த எதிர்ப்பும் இருக்கக்கூடாது.

ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியை முதலில் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். அது தவிர, இந்தி உட்பட முடிந்தவரை பல மொழிகளைக் கற்க வேண்டும். உலகமயமாக்கப்பட்ட மொழியாக ஆங்கிலம் கற்றுக்கொள்வது மிக முக்கியம் ஆனால், ஆங்கிலத்தில் கல்வி கற்காவிட்டால் வாழ்க்கையில் உயர முடியாது என்பது தவறான கருத்து.

இந்திய ஜனாதிபதி,

பிரதமர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோரை மேற்கோள் காட்டி பேசிய வெங்கையா நாயுடு, இவர்கள் அனைவரும் சாதாரண பள்ளிகளில் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்றவர்கள்தான் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad