ரயில் தாமதம்; பயணிகளுக்கு இழப்பீடு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

ரயில் தாமதம்; பயணிகளுக்கு இழப்பீடு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரயில் தாமதம்; பயணிகளுக்கு இழப்பீடு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கடந்த 2016ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்று ஜம்மு நகரிலிருந்து ஸ்ரீநகருக்கு ரயிலில் பயணம் மேற்கொள்ளவிருந்தது. ஆனால், சுமார் 4 மணி நேரம்
ரயில் தாமதம் காரணமாக அவர்கள் அதிக விலைக்கு கார் பிடித்து சென்றனர். இதனால், அங்கிருந்து அவர்கள் ஏற வேண்டிய விமானத்தையும் தவற விட்டனர். ஸ்ரீநகர் தால் ஏரியில் படகு சவாரி செய்வதற்கான முன்பதிவும் ரத்தானது.

இதையடுத்து, ரயில்வே துறையின் தேவையற்ற தாமதம், சேவைக் குறைபாட்டுக்கு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அக்குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். அதில் தீர்ப்பளித்த நீதிமன்றம், அந்த குடும்பத்துக்கு ரூ.30,000 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வடமேற்கு ரயில்வே துறைக்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ரயில்வே துறை சார்பில் மாநில நுகர்வோர் தீர்ப்பாயம், தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு அங்கு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, இதனை எதிரித்து ரயில்வே துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, “ரயில் தாமதமாகப் புறப்பட்டதற்கு சேவைக் குறைபாடு காரணம் என்று கூற முடியாது. ரயில்வே விதிகள் 114, 115ன்படி ரயில்கள் தாமதத்துக்கு இழப்பீடு வழங்க ரயில்வே பொறுப்பாகாது. ரயில் தாமதமாக வருவதற்கும், புறப்படுவதற்கும் பல காரணங்கள் இருக்கும்” என்று ரயில்வேதுறை சார்பில் ஆஜரான மத்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கில் தீரிப்பளித்த உச்ச நீதிமன்றம், “பொதுத்துறை போக்குவரத்து நிலைத்திருக்க தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டும். ரயில் தாமதமாக இயக்கப்பட்டதற்கு எந்தவிதான ஆதாரங்களையும் ரயில்வேதரப்பில் தெரிவிக்கவில்லை. ரயில் தாமதமாக வந்தமைக்கும், புறப்பட்டதற்கும் ரயில்வே சரியான காரணத்தைக் கூறுவது அவசியம். குறைந்தபட்சம் ரயில் தாமதமாக வந்ததற்கு விளக்கம் அளிக்க வேண்டும், ஆனால், அதில் ரயில்வே தோல்வி அடைந்துவிட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad