மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு: சௌம்யா ஸ்வாமிநாதன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 26, 2021

மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு: சௌம்யா ஸ்வாமிநாதன்

மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு: சௌம்யா ஸ்வாமிநாதன்

சென்னை தரமணியில் அமைந்துள்ள ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ எனும் திட்டத்தில் மாணவர்கள் கோரிக்கைக்கான துவக்க விழா நடைபெற்றது. இதில், மாணவர்களிடம் இருக்கும் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் அறிவுத்திறன் ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.


சென்னை மாநகராட்சி பள்ளி சார்பில் மட்டும் ஆண்டுதோறும் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சுவாமிநாதன் அறிவியல் ஆராய்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதுவரை இந்நிறுவனத்தின் மூலம் 3,000 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

அந்த வகையில், இன்று நடைபெற்ற ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ எனும் திட்டத்தில் மாணவர்கள் கோரிக்கைக்கான துவக்க விழா நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌம்யா ஸ்வாமிநாதன், நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் நாட்டில் பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. முக்கியமாக கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் இருந்து மக்களை அறிவியல் தொழில் நுட்பங்கள் காத்துள்ளது. நவீன அறிவியல் தொழில் வளர்ச்சியின் காரணமாகவே ஓராண்டுக்குள் கொரோனாவிற்கான தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் கண்டுபிடித்தது என்றார்.


இந்தியாவில் கடந்த 20 மாதங்களுக்கும் மேல் பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சிற்றூர்கள், மலைவாழ் இடங்களில் வசிக்கும் மாணவர்களால் இணைய வகுப்புகளில் பங்கேற்க முடிவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad