தேனியில் மீண்டும் விஜய் போஸ்டர், தலைமை இயக்கம் கடைசி எச்சரிக்கை..!
சமீப காலமாக விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் அரசியல் கட்சி தலைவர்களுடன் இணைத்து விஜய்க்கு பேனர் அமைத்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு மத்தியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தலைமை அனுமதி அளித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
அதனை தொடர்ந்து, முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஜய் தனது பெயரைப் பயன்படுத்தி எந்தக்
கூட்டத்தையும் செயல்பாடுகளையும் நடத்துவதைத் தடுக்ககோரி அவரது பெற்றோர் உட்பட 11 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் சிவில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு செப்டம்பர் 27 -ம் தேதி (நாளை) விசாரணைக்கு வரும் என தெரிகிறது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் விஜய மக்கள் இயக்கத்தினர் மீண்டும் கட்சி போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்த போஸ்டரில் '' 2026 தமிழ்நாட்டிற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் ஆட்சி '' என குறிப்பிட்டு ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞரணி இத்தகைய போஸ்டரை வைத்துள்ளது.
அந்த போஸ்டரில் பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் இப்போதைய முதல்வர் ஸ்டாலின் புகைப்பங்களை வரிசைப்படுத்தி அவர்களை அடுத்து இனி விஜய்தான் என்றவாறு அந்த பேனர் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பங்களை மீண்டும் மீண்டும் விஜய் ரசிகர்கள் செய்து வரும் நிலையில்
அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் '' இயக்க தோழர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இப்படி தொடர்வது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற சம்பவங்களை நமது தளபதி என்றும் விரும்புவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில் தளபதியின் அனுமதி பெற்று இயக்க ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவரின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது என்று இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment