நகை கடன் தள்ளுபடி: உண்மையான பயனாளிகளுக்கும் சிக்கல்? அரசின் கிடுக்கிப்பிடி நடவடிக்கை
நகை கடன் தள்ளுபடி தொடர்பாக ஆய்வு நடத்த தமிழக அரசு புதிய குழுவை அமைத்துள்ளது. இந்த குழு வங்கிகளில் பெறப்பட்ட 100 % பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய உத்தரவு.
கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை வாங்கியுள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. சட்டசபையில் அந்த வாக்குறுதியை சுட்டிக்காட்டி பேசிய நிதியமைச்சர்
பழனிவேல் தியாகராஜன் '' முந்தைய அரசு, தேர்தலுக்கு முன்பாக பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு 12,110.74 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.
முந்தைய அரசால் இந்த அரசின் மீது சுமத்தப்பட்ட மிகப் பெரிய நிதிச்சுமையாக இது அமைந்ததாக தெரிவித்த அமைச்சர் இதற்காக 4,803.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் இதுபோன்ற இதர நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும்போதும் இதே நிகழ்வு பொருந்தும் என்பதால், அது குறித்து உரிய விசாரணைக்குப் பிறகு, தள்ளுபடி குறித்து இந்த முடிவு எடுக்கப்படும்'' என கூறினார்.
அதனை தொடர்ந்து நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக அரசு கணித்தவாறே ஐந்து சவரனுக்குள் தான் கடன் தள்ளுபடி என்பதால் ஒரு சிலர் தன்னிடமுள்ள நகைகளை ஐந்தைந்து
சவரன்களாகப் பிரித்து அடகு வைத்து 340க்கும் மேற்பட்ட கடன்களை பெற்றுள்ளதாகவும் சில இடங்களில் ஒரு நபர் மட்டும் தலா 600 கடன்களுக்கும் மேல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதில் கவரிங் நகை மோசடியும் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மோசடி செய்பவர்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான பயனாளிகள் பலன் அடையும் விதமாக நகை கடன் தள்ளுபடி குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இந்த சூழலில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேடு எதிரொலியாக தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
No comments:
Post a Comment