பள்ளிகள் முழுமையாக திறப்பு: அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 26, 2021

பள்ளிகள் முழுமையாக திறப்பு: அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

பள்ளிகள் முழுமையாக திறப்பு: அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.


இதனிடையே, பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் மன சோர்வில் இருந்து விடுபட்டிருந்தாலும், பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள், ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னை தரமணியில் அமைந்துள்ள ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்னும் திட்டத்தில் மாணவர்கள் கோரிக்கைக்கான துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், மாணவர்களிடம் இருக்கும் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் அறிவுத்திறன் ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நவீன அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் இயற்கை வேளாண்மையை மேம்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், தொடக்கப் பள்ளிகளை திறப்பதற்கான பல்வேறு ஆலோசனைகள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்கப்பட்டு வருகிறது. இக்கருத்துக்களின் அடிப்படையில் முதல்வர் பள்ளிகளை திறப்பதற்கான நல்ல முடிவினை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.



அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் முதல்வரிடம் ஆலோசனை பெற்று பள்ளிகளை முழுமையாக திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தகவல் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad