ஜிஎஸ்டியில் விலக்கு: அப்பள பிரியர்களுக்கு குட் நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

ஜிஎஸ்டியில் விலக்கு: அப்பள பிரியர்களுக்கு குட் நியூஸ்!

ஜிஎஸ்டியில் விலக்கு: அப்பள பிரியர்களுக்கு குட் நியூஸ்!

ஜிஎஸ்டி வரி ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு விதமாக வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் உணவில் பயன்படுத்தப்படும் அப்பளங்களில் வெவ்வேறு வகையில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
அப்பளம் வட்ட வடிவமாக இருந்தால் அதற்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதே சமயம் சதுர வடிவத்தில் இருந்தால் அதற்கு ஜிஎஸ்டி உண்டு.

இதுகுறித்து ஆர்பிஜி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்தார். “யாராவது நல்ல பட்டய கணக்காளர் இதில் உள்ள தர்க்கத்தைப் புரிய வைத்தால் நல்லது” என ட்விட்டரில் அவர் பதிவிட அது வைரலாக பரவியது. இந்நிலையில் இதற்கு மத்திய மறைமுக வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

“ஜிஎஸ்டி சுற்றறிக்கை எண்2/2017 சிடி(ஆர்) என்ற வழிகாட்டுதல் வரைவில் எண் 96ல் அப்பளங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் வடிவங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே அப்பளங்கள் எந்த வடிவத்தில் எந்த பெயரில் இருந்தாலும் அவற்றுக்கு ஜிஎஸ்டி இல்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் அப்பளம் என்றும் வட இந்தியாவில் பப்படம் என்றும் அழைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக பல்வேறு வடிவங்களில் இவை தயாரிக்கப்படுகின்றன. அப்பளமோ, பப்படமோ எப்படி அழைக்கப்பட்டாலும் எந்த வடிவத்தில் இருந்தாலும் இனி அதற்கு ஜிஎஸ்டி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad