கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்: சபையில் உறுதியளித்த அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்: சபையில் உறுதியளித்த அமைச்சர்!

கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்: சபையில் உறுதியளித்த அமைச்சர்!

கழிவுநீர் கலக்கும் வாய்க்கால்களிலும் ஓடைகளிலும் பைப் லைன் அமைத்து கழிவுநீரை தனியாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட 11ஆவது வார்டு பக்கரி பாளையம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க அரசு முன் வருமா என்ற கேள்வியையும், ஆம் எனில் அந்த நீர்த்தேக்கத் தொட்டி எப்போது அமையும் என்று கேள்வி எழுப்பினார்

அதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு, “பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட நகராட்சி 11 பக்கிரிபாளையம் தொகுதிக்குட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க அங்கு நிர்வாகத் துறைக்கு சொந்தமான இடம் இல்லை. எனவே வருவாய்த்துறை நில உரிமை மாற்றம் செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும். மேலும் அது இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய உறுப்பினர், “60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பண்ருட்டி பகுதியில் ஆறு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை உருவாக்கிட 76 லட்சத்திற்கான முன் மொழிவினை பண்ருட்டி நகராட்சி நகராட்சி நிர்வாகத் துறை செயலருக்கு அனுப்பியிருக்கிறது. இதனை அமைச்சர் கனிவு கூர்ந்து பரிசீலித்து பண்ருட்டி நகர் முழுக்க தண்ணீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே என் நேரு, “உறுப்பினர் கூறியது போன்ற முன்மொழிவு துறைக்கு வந்திருந்தால் நிச்சயம் அதற்கான நடவடிக்கை துறை ரீதியாக எடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள 124 நகராட்சிகளில் பல்வேறு இடங்களில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பழைய பைப் லைன்கள் பழுதடைந்து பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க முடியவில்லை .


No comments:

Post a Comment

Post Top Ad