ஸ்டாலினின் வன்னியர் சமூக பாசம்: இதுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

ஸ்டாலினின் வன்னியர் சமூக பாசம்: இதுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

ஸ்டாலினின் வன்னியர் சமூக பாசம்: இதுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் மட்டுமல்லாமல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவும் ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்றுள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற போது வழங்கிய வாக்குறுதியை யார் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன் என ஸ்டாலின் சட்ட சபையில் கூறினார். 2019ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதியையே மறக்காமல் நிறைவேற்றுகிறேன் என்றால் 2021 சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டுவிடுவேனா என எதிர்கட்சிகளை கேள்வி கேட்பது போல் அமைந்தது.

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை திமுக அரசு ஒப்புதல் அளித்து அதை அமல்படுத்தியுள்ளது. தற்போது நினைவு மண்டபமும் எழுப்பப்படும் என கூறியுள்ளது. வன்னியர்களுக்கு சாதகமாக திமுக அரசு முக்கிய நகர்வுகளை மேற்கொள்வதன் பின்னணி குறித்து விசாரித்தோம்.



அதிமுக சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தாலும் குறிப்பிட்ட சில இடங்களில் திமுகவை கால் ஊன்றவிடாமல் பார்த்துக் கொண்டது. அது எந்தெந்த இடங்கள் என பார்த்தால் கவுண்டர் - வன்னியர் சமூக மக்கள் எங்கு நெருக்கமாக இருக்கிறார்களோ அங்கு அதிமுக ஸ்கோர் செய்துள்ளது.

கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சமூக வாக்குகள் மட்டுமல்லாமல் வன்னியர் சமூக வாக்குகளும் கணிசமாக இருக்கின்றன. இந்த இரு வாக்குகளும் இணைந்ததன் காரணமாகவே அதிமுக அங்கு பெரும்பாலான இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்கட்சியாக அமர முடிந்தது.



வட மாவட்டங்களில் தலித் வாக்குகள் திமுகவுக்கு திரும்பியதால் பல இடங்களில் வெற்றி பெற முடிந்தது. சி.வி.சண்முகம் உட்பட முன்னாள் அமைச்சர்களையும் தோற்கடிக்க முடிந்தது. எனவே வன்னியர் சமூக வாக்குகளை குறிவைத்து களமிறங்கினால் மட்டுமே அதிமுகவின் பலத்தை கொங்கு மண்டலத்தில் குறைக்க முடியும் என்பதும் ஒரு கணக்கு.

No comments:

Post a Comment

Post Top Ad