கேரளாவிலிருந்து ஸ்டாலினுக்கு வந்த வாழ்த்து செய்தி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

கேரளாவிலிருந்து ஸ்டாலினுக்கு வந்த வாழ்த்து செய்தி!

கேரளாவிலிருந்து ஸ்டாலினுக்கு வந்த வாழ்த்து செய்தி!

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. குறுகிய காலமே என்றாலும் ஆக்கப்பூர்வமான பல திட்டங்களை முன்னெடுத்துள்ளதால் பல்வேறு தரப்பினரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா பரவல் மிக உச்சத்தில் இருந்த நிலையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தது, பொருளாதார வல்லுநர் குழு, மாநில திட்ட வளர்ச்சிக்குழு, கொரோனா நிவாரணம், தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றம் என பல்வேறு விஷயங்களில் ஸ்டாலின் சிக்ஸர் அடித்துள்ளார்.


இதனால் தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்தும் அவருக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் கேரள அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையை கேரள தொல்லியல்துறை அமைச்சர் அகமது தேவர்கோவில் நேரில் பார்வையிட்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போத ு பேசிய அவர், “பத்மநாபபுரம் அரண்மனை தமிழ்நாடு-கேரள ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை போல, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். தமிழ்நாடு முன்பை போல் மாறியுள்ளது. முதல்வர் நல்ல முறையில் ஆட்சி புரிகிறார்” என பாராட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad