செம காமெடி தளர்வுகள்; திமுக அரசை கடுமையாக விமர்சிக்கும் அதிமுக! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

செம காமெடி தளர்வுகள்; திமுக அரசை கடுமையாக விமர்சிக்கும் அதிமுக!

செம காமெடி தளர்வுகள்; திமுக அரசை கடுமையாக விமர்சிக்கும் அதிமுக!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில்
திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து மு.க.ஸ்டாலின் முதல்முறை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிரம் காட்டி வரும் அதே வேளையில், பல்வேறு மக்கள் நலத்திட்ட அறிவிப்புகளை திமுக ஆட்சி வெளியிட்டு வருகிறது. தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் பெரிதும் குறைந்திருக்கிறது. இதையொட்டி அதிக அளவில் தளர்வுகள் அமல்படுத்தப் பட்டுள்ளன. அதேசமயம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை நிறைவேற்றவில்லை என்று திமுக ஆட்சி மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிப்பு

இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’வில் திமுக ஆட்சியின் அறிவிப்புகள் மிகவும் நகைப்பிற்கு உரியவையாக இருப்பதாக குற்றம்சாட்டப் பட்டுள்ளது. அதாவது, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் அக்டோபர் இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் பள்ளிக் கூடங்களோடு மதுக்கடைகளும் திறக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆலய வழிபாடுகளில் கட்டுப்பாடு அமலில் இருக்கும். வணிக வளாகங்கள், தியேட்டர்கள் திறந்திருக்கும்.

மூன்றாவது அலை எச்சரிக்கை

ஆனால் வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு மட்டும ே விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு குழப்பங்களுடன் கூடிய ஊரடங்கை திமுக ஆட்சி நீட்டித்திருப்பதாக விமர்சிக்கப் பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா என்று ஆங்காங்கே அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஒருபக்கம் நிபா வைரஸ் பரவல் குறித்த அச்சம் நீடிக்கிறது. மறுபக்கம் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கைகள் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

திமுக அரசு மீது கடும் விமர்சனம்


இதற்கிடையில் திமுக அரசின் அறிவிப்புகள் கேலிக் கூத்தாகவே இருக்கின்றன. விநாயகர் சதுர்த்தியை அனைத்து மக்களும் தங்களது வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று திமுக அரசு கடுமை காட்டி வருகிறது. ஆனால் போதை ஆசாமிகள் கூடுகிற டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளற்ற சுதந்திரத்தை வழங்குவத ு மக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கி வருவாதாக கூறப்பட்டுள்ளது. இதனால் திமுக ஆட்சிக்கால ஊரடங்கு என்பது மதுபான கடைகளின் வியாபாரம் சார்ந்ததாகவே இருக்கிறது.

நோய்த்தொற்று விழிப்புணர்வு இல்லாத மாணவர்கள் ஒன்று சேரும் பள்ளிக்கூடங்களை திறந்து வைத்து விட்டு அவர்களை, ‘முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்’ என்று அச்சுறுத்துவது பரிதாபத்திற்கு உரியது. ஒட்டுமொத்தமாக திமுக அரசின் அறிவிப்புகள் இலவச மொட்டை திட்டம் போல தலைமை பிய்த்துக் கொள்வதாக இருக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad