தமிழகத்திற்கு விரைவில் தேர்தல்; அதிமுக ஆட்சி மலரப் போகிறது - வைகைச்செல்வன் பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

தமிழகத்திற்கு விரைவில் தேர்தல்; அதிமுக ஆட்சி மலரப் போகிறது - வைகைச்செல்வன் பரபரப்பு!

தமிழகத்திற்கு விரைவில் தேர்தல்; அதிமுக ஆட்சி மலரப் போகிறது - வைகைச்செல்வன் பரபரப்பு!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து மு.க.ஸ்டாலின் முதல்முறை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். திமுக ஆட்சி முடிவடைவதற்கு இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில், அதிமுக இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இலக்கிய அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.

திமுக நிர்வாகிகள் தலையீடு

இதில் கலந்து கொண்டு பேசிய கழக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன், வாணியம்பாடி தொகுதியில் கழக கொடி பறந்து கொண்டிருப்பது பெருமையாக இருக்கிறது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஜி.செந்தில்குமார் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் பாராட்டுக்கள். அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது. இதற்கு வருங்காலம் நிச்சயம் பதில் சொல்லும். அனைத்து அரசு துறைகளிலும் திமுக நிர்வாகிகளின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை.

தமிழக மக்கள் புலம்பல்

சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மு.க.ஸ்டாலின் தினந்தோறும் திணறிக் கொண்டிருக்கிறார். தற்போது விடியா திமுக அரசுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். நிதி பற்றாக்குறை என்று சொல்லும் திமுக அரசு எந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும்.

விரைவில் அதிமுக ஆட்சி

எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். எனவே மக்களுக்காக பணியாற்றிய மகத்தான இயக்கம் அதிமுக மட்டுமே. விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது. அதில் திமுகவினர் அராஜக செயலில் ஈடுபடுவர். எனவே அதிமுகவினர் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி சரித்திரம் படைக்க இலக்கிய அணி நிர்வாகிகள் அல்லும் பகலும் அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad